I am intoxicated by your beauty! – Thirukkural 1081-1090


—————————————————————————————————————————————————————-

Become Fan of Karka Nirka Blog in Facebook

http://www.facebook.com/pages/Karka-Nirka/353094691592

——————————————————————————————————————————————————————

I have read at least around 300-400 Thirukkural verses in school. But not a single verse on Kamathupaal. So I decided to share the first chapter from Kaamathupaal. I can guarantee that it would be a surprise package for any one who hasn’t read any verses from Kaamathupaal.

———-

காமத்துப்பால் – Pleasure

களவு இயல் – Concealed love
109.தகை அணங்கு உறுத்தல்- Mental disturbance caused by the lady’s beauty

——————-

1081 அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு.

அணங்குகொல்! ஆய் மயில்கொல்லோ!- கனங்குழை-
மாதர்கொல்!,மாலும் என் நெஞ்சு.

மு.வரதராசனார் உரை
தெய்வப் பெண்ணோ! மயிலோ? கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ? என் நெஞ்சம் மயங்குகின்றதே!

Explanation:

Is she an anangu? or a fair peacock ? or a women wearing a heavy ear ring ? she is disturbing my heart!

Anangu – 7. Celestial damsel; 8. Demoness that takes away one’s life by awakening lust or by other means;

————————

1082 நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.

நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல்-தாக்கு அணங்கு
தானைக் கொண்டன்னது உடைத்து.

மு.வரதராசனார் உரை
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையயும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.

Explanation:

The return glances for my glance at her beauty, is like an army gathered by Anangu to destroy me, when she has the capability to torture and destory a person on her own.

Anangu – 8. Demoness that takes away one’s life by awakening lust or by other means; 10. Devil;

——————-

1083 பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

பண்டு அறியேன், ‘கூற்று’ என்பதனை; இனி அறிந்தேன்;
பெண்தகையான் பேர் அமர்க் கட்டு.

மு.வரதராசனார் உரை
எமன் என்று சொல்லப்படுவதை முன்பு அறியேன்; இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண் தன்மையுடன் போர் செய்யும் பெரிய கண்களை உடையது.

Explanation:

In old times I never believed in Kootru; Now I am a believer; He has taken the form of a women who wages war with her big eyes.

Kootru : 1. Yama, the god of death; 2. Kāla, the chief attendant of Yama;

—————-

1084 கண்டார் ரயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன கண்.

கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான், பெண் தகைப்
பேதைக்கு, அமர்த்தன கண்.

மு.வரதராசனார் உரை
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

Explanation:

This feminine and young/simple eyes eats away the life of people who gaze at her; why is there a difference in her eyes ?

Her eyes are simple/young which a innocent beauty. At the same time her looks kills the onlookers, who fall prey to lust. How the eyes have both the innocence and destruction?

——————————

1085 கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர
னோக்கமிம் மூன்றும் முடைத்து.

கூற்றமோ! கண்ணோ! பிணையோ!- மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து.

மு.வரதராசனார் உரை
எமனோ? கண்ணோ? பெண்மானோ? இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

Explanation:

Is it the death ? or is it human eyes ? or is it a female deer? her simple sight has characteristics of all three.

To her sight  instills so much fear inside me , so is her eyes the death which stares at me ? or her tenderness are seen in her eyes while she sees me, so is she the female deer ? or is it simple eyes looking at me? Her eyes all the three characterisitcs.

மடவரல் – Simplicity, artlessness;பிணை – 6. Female of animals; 7. Doe, hind, female deer;

——————–

1086 கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர்
செய்யல மன்னிவள் கண்.

கொடும் புருவம் கோடா மறைப்பின், நடுங்கு அஞர்
செய்யலமன், இவள் கண்.

மு.வரதராசனார் உரை
வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

Explanation:

If her cruel eyebrows weren’t having the curves and would hide her eyes; her eyes wont any more cause the mental distress in me!

If I couldn’t see her eyes I would be saved from the distress her eyes cause in me. IF the eyebrows instead of adding beauty,did the job of covering her eyes, I would be saved from the lust she invokes in me.

அஞர்- 1. Mental distress;2. Disease; 3. Fear;

—————–

1087 கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர்
படாஅ முலைமேற் றுகில்.

கடாஅக் களிற்றின்மேல் கண் படாம்-மாதர்
படாஅ முலைமேல் துகில்!.

மு.வரதராசனார் உரை
மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது.

Explanation:

Clothing over her firm breast is like the ornamental blindfold on the must elephant.

The male elephant in its must period is very aggressive and very dangerous to the humans. If the elephant is blindfolded in this state it just adds to the destruction it can cause. Except for the elephant mahout it would be really difficult for any one else to remove the blinfold. Similarly the women’s heavy breast is causing destruction in the hearts of the onlookers and only her lover/husband can remove the clothing over her breast. (from Thevaneya Pavanar tamil marabu Urai)

மாதர் படாஅ முலை – can mean either women’s firm breast or women’s untouched breast.

கட்படாம் -Ornamental fillet or frontlet for blindfolding an elephant;
கடாம் – 2. Secretion of a must elephant;
படாஅ is negative of
படு¹-தல் – 7. To hit or strike against; to touch; 19. To incline, lean over; 21. To hang;

Must is a periodic condition in bull elephants, characterized by highly aggressive behavior, accompanied by a big rise in reproductive hormones – testosterone levels in an elephant in musth can be as much as 60 times greater than in the same elephant at other times. During musth, even the most otherwise placid of elephants may try to kill any and all humans.
http://en.wikipedia.org/wiki/Musth

———

1088 ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் முட்குமென் பீடு.

ஒள் நுதற்கு, ஓஒ! உடைந்ததே-ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு!.

மு.வரதராசனார் உரை
போரக்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என் வலிமை, இவளுடைய ஓளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே!

Explanation:

Oh oh! her bright forehead is breaking my might which instills fear in my foes in the battlefield.

How ever might person you are when you fall in love with a beautiful women all your might breaks away.
ஒண்ணுதல் – Lit., bright forehead, fig., woman, having a beautiful forehead
ஓஒ ōo – Oh! O! expressing wonder;ஞாட்பு -Battlefield;நண்ணார் -Foes;
உட்கு¹தல்- 1. To be afraid; to stand in awe, show signs of fear;பீடு¹ – 2. Might, strength;

———-

1089 பிணையேர் மடநோக்கும் நாணும் முடையாட்
கணியவனோ ஏதில தந்து.

பிணை ஏர் மட நோக்கும், நாணும் உடையாட்கு
அணி எவனோ, ஏதில தந்து?.

மு.வரதராசனார் உரை
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

Explanation:

She has tender sight comparable to a female deer and modesty; who gave her those other(artificial) ornaments.

She has the natural ornaments of beauty and modesty , does she need any other man made ornaments?
The same feeling is also conveyed by Illango in his masterpiece in silapadikaram. Koval on his wedding night with Kannagi while making love to her , says the same line(most probably inspired form this kural!)..

திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?
மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!

A foolish vanity has laden you with ornaments
that bend your too frail waist and bring these tear
like pearls of perspiration to your tender brow.
Set in pure gold,you yourself a jewel without rival
.(Translated by Alian Danielou)

பிணை-7. Doe, hind, female deer;மட- 3. Beauty; 4. Tenderness, delicacy; நாண்¹ 1. Sense of shame 2. Bashfulness, modesty;
——————-

1090 உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற்
கண்டார் மகிழ்செய்த லின்று.

உண்டார்கண் அல்லது, அடு நறா, காமம்போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று.

மு.வரதராசனார் உரை
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லை

Explantion:

Unlike the toddy which gives intoxication when a person drinks it, love passion(lust) causes intoxication by mere sight!

If I see you I get the intoxication(the kick!), you are such a beauty.

அடுநறா – Distilled toddy; மகிழ்-1. Joy, exhilaration; 2. Intoxication from liquor;

———-

Reference:

Thirukkural urai by M.Varadharajan(Mu.Va), Kalaingar Karunanithi, Thevaneya Pavanar

Thirukkural Transltion by Sudhanandha Barathi, Dr. G.U.Pope.

Silapadikaram by Alian Danielou

Tamil Lexicon

——–

Please post your comments.

Follow me in twitter http://twitter.com/vairam

Follow blog in Face book http://www.facebook.com/group.php?gid=83270822979&ref=mf

Orkut community http://www.orkut.com/Community.aspx?cmm=49797549

Subscribe Karkanirka

Digg!

Stumble It!

7 Comments

  1. wow, vairam – what selection of verses.

    பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

    if only we could convince them !!!! you are yet to experience this..enjoy bachelorhood..

    cheers
    vj

  2. வணக்கம். தங்களின் ஒவ்வொரு படைப்பையும் படித்து இரசிக்கும் இரசிகன்.

    சிலரிடம் தமிழ்ப் புலமை இருக்கும். சிலரிடம் ஆங்கிலப் புலமை இருக்கும்.

    உங்களிடம் தமிழ்புலமையும் ஆங்கிலப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளது. அதோடு கணினிப் புலமையும் உள்ளது.

    அதுமட்டுமல்ல இயற்கையைக் காதலிக்கும் கண்டு உற்று உணர்ந்ததை மற்றவர்களுக்கு எளிமையாக அழகாக எடுத்துக் கொடுக்கும் மனிதத் தன்மையும் உள்ளது.

    வாழ்த்துகள்.

    உங்களோடு பேசவேண்டும் என்னும் ஆவல் அதிகரித்துக் கொண்டுள்ளது.

    நன்றி.

  3. தமிழ்த்தாய் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஏராளம். வாழ்த்துகள்.

  4. Heey Vairam,
    happen to stumble on ur blog..
    Just going through all ur articles in the blog…
    really really good..I know the amount of
    time you would have spent to write these….
    Am happy to read these kind of good articles…

    You might find this thirukural interesting too…

    வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினிர் என்று.

    Cheers,
    Senthil

  5. நான் தற்பொழுது திருக்குரளினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டுள்ளேன். மூன்று மாதங்களில் முடிவுறும். பல ஆங்கில மொழி பெயர்ப்புகள் இருக்கும் போது மேலும் ஒரு மொழி பெயர்ப்பு எதற்கென்ற கேள்வி தங்கள் உள்ளத்தில் எழலாம். நான் தமிழ் பேச எழுத மட்டுமே தெரிந்த திருக்குறளைப் பொருத்தவரை பாமரனான ஒருவன். திருக்குறளை தமிழ் அற நூல்கள்அல்லது பிற அற நூல்களின் அறிவின் பின்புலம் இன்றி தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒருவன் ஒரு திருக்குறள் சொல் அகராதியின் உதவியுடன் புரிந்து கொண்டு மொழிபெயர்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் முயன்று வருகிறேன். ஏனெனில் சொற் சிக்கனத்திற்குப் பெயர்போன குறள் உரை ஆசிரியர்களுடைய புல அறிவுக்கு இடம் தரும் வகையில் பல விளக்கங்களுக்கு இடம் தருகிறது. ஆதலால் கிரியேட்டிவிட்டியை மட்டுமே வைத்து விளக்கம் தந்தால் எப்படி வரும் என்ற ஆர்வத்தில் யாருடைய உரையையும் சாராது மொழிபெயர்ப்பு செய்துவருகிறேன்.
    இன் நூலை வெளியிட யாரை எல்லாம் அனுகலாம் என கூற இயலுமா?
    நன்றி.
    அர.வெங்கடாசலம்.

  6. I am planning to include english to my site. Suggestions are welcome to add additional options to my site. so that the users will benefit.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.